• பாழ் – சைபர்(zero)

    Posted on October 18, 2016 by adminy in கட்டுரைகள்.

    “சைபர்” எனப்படும் வெற்றெண் பற்றியும், அதற்கான வரிவடிவம் யாதென்பது
    பற்றியும் தமிழில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. பாழ் என்று வெற்றெண்ணை,
    பரிபாடல் கூறுகிறது. பாழ் என்ற வெற்றெண்ணைப் பற்றிய அறிவு, தமிழர் களிடையே
    இருந்திருத்தல் வேண்டும் என்பதை, தொன்மைக் கால தமிழரின் கட்டிடவியல் கலை
    கூறாமல் கூறுகிறது. சிந்து வெளி மக்களின் எண்களை ஆய்வு செய்தோர், ஒன்று முதல்
    பத்துவரையிலான எண்களின் வரி வடிவங்களைக் கண்டுபிடித் துள்ளனர். அவைகளில்,
    பாழ் எனப்படும் வெற்றெண்ணைப் பற்றிய செதிகள் தெளிவாக இல்லை. பத்து என்ற
    இலக்கத்தை, இரு அரைவட்டங்களாகக் காட்டியுள்ள சிந்துவெளி மக்கள் அவற்றை மேல்
    கீழாகப் பொருத்தும் போது 0 என்ற வரிவடிவம் கிடைத்ததைப் பற்றியும்
    அறிந்திருக்க வேண்டும்” சிந்துவெளி எண்ணின் வரிவடிவமே, 0 என்ற பாழ் எண்ணுக்கு
    மூலமான தாக இருந்திருக்க வேண்டும். சிந்துவெளி மக்களின் 1 முதல் 10 வரையிலான
    எண்களை, தமிழ் எண்களாகவே கொள்ளலாம்.

    பாழ் எண்

    சீரோ (Zero) என்றும், சைஃபர் (Cipher) என்றும் சொல்லப் படும் வெற்றெண்ணைப்
    பாழ் எண் என்று பரிபாடல் கூறுகிறது. பாழ் என்பது, ஒன்றுமில்லாததைக்
    குறிக்கும் தமிழ்ச் சொல் லாகும். ‘பாழாய்ப் போக என்ற வஞ்சினச் சொல் இன்றும்
    வழக்கில் உள்ளது. பாழாய்ப் போ = ஒன்றுமில்லாமல் போ. கடைக்கழக இலக்கியங்களில்
    பரிபாடல், பாழ் எண்ணைப் பற்றிக் கூறினாலும், அதன் வரிவடிவம் என்னவென்பது தெளி
    வாக்கப்படவில்லை. சிந்துவெளி மக்களும் பாபிலோனியரும், யூதரும், அராபியரும்
    பாழ் எண்ணெப்பற்றி அறிந்திருந்தனர் என்பதற்கு அவர்களின் கட்டிடக்கலை அறிவும்,
    வணிக முயற்சி களும் சான்றுகளாக உள்ளன. பாழ் எண்ணின் மதிப்பை அறியாது,
    வானுயர்ந்த கட்டிடங்களை அவர்கள் கட்டியிருக்க இயலாது. வணிகத்தில்
    ஈடுபட்டிருக்கவும் முடியாது. ஆனால், பாழ் எண்ணைப் பிற்காலத்தில் வந்தவர்கள்
    தான் கண்டறிந்தனர் என்பது தவறான சிந்தனையாகும்.

    “எபிரேயத்தின் தாய்மொழி தமிழே.”
    – சொல், மொழி, வரலாற்று அறிஞர்
    தக்கார் ம.சோ. விக்டர். யாத்திசைப் பதிப்பகம்

Comments are closed.