சேயன்
பக்கங்கள் 272
விலை. உரூ. 175.00
தொல்காப்பியம் கூறும் சேயோன், முருகனே என்று இடைக்கால உரையாசிரியர்கள் தவறாகக் குறித்து விட்ட நிலையின் முருகன் குறிஞ்சிக் கடவுளாகக் காட்டப்படுகிறான். சிவனுக்கு மகனாக அறியப்படும் முருகன் உண்மையில் குறிஞ்சி நிலக்கடவுளா என்பது பற்றி இந்நூல் ஆய்வு செய்கிறது. முருகனை, ஸ்கந்தனாகவும் சுப்ரமணியனாகவும் குறிப்பிடும் சமஸ்கிருத இலக்கியங்கள், முருகனைத் தமிழ்க் கடவுளாகக் காட்டவில்லை. முருகனின் பிறப்பிடம் மெசபத்தோமியாவே என்றும் கூடச்சிலர் கருதினர். முருகன் பற்றிய தொன்மக் கதைகளோடு, வரலாற்றுச் செய்திகளையும் இணைத்து, முருகன் தமிழ்க்கடவுளே என, சேயன் என்ற நூல் விளக்குகிறது.