All Products >> >>தமிழர் வழக்கு 7

Product Details Price: Rs 200

தொல் தமிழர்களின் வழக்குகளும் வழக்காறுகளும் – 7
பக்கங்கள் 168 – விலை. உரூ. 200.00
ஓர் இனத்தின் பெருமைக்கும் சிறப்புக்கும் அடிப்படைக் காரணங்களாக அமைவது, அவ்வினம் பேசும் மொழியும், அவ்வினத்தி நாகரிகமும் பண்பாட்டுத் தாக்கங்களுமாகும். ஒவ்வொரு இனத்தார் பேசும் மொழியில் அவ்வினத்தாரின் கடந்த கால வரலாறு பொதிந்து கிடப்பதை அறியலாம். குறிப்பாக ஒவ்வொரு சொல்லும் அவ்வினத்தின் வரலாற்றை விளக்குவதாகும். அவ்வரலாறு கூறும் செய்திகளும் நடைமுறைகளும் பல்லாயிரம் ஆண்டுகள் தம் பயணத்தைத் தொடர்கின்றன. அவ்வாறான சொற்கள் பற்றிய விளக்கங்களை தமிழ் மொழியில் அறியலாம். சொற்கள் கூறும் தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும், அகர வரிசைப்படி விளக்கப்பட்டுள்ளன. அச்சொல்லின் வேர், அது விரிந்த தன்மை, உலக மொழிகளில் அச்சொல் ஏற்படுத்திய தாக்கங்கள், திரிந்த நிலைகள் ஆகியவை பற்றிய செய்திகளே தொல்தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும் என்ற சொல்விளக்க நூலாகும்.