All Products >> >>தமிழ் மூலத்தில் தமிழ்

Product Details Price: Rs 200

தமிழ் மூலத்தில் தமிழ் – சமற்கிருத அகராதி
பக்கங்கள் 192
விலை. உரூ. 200.00
சமற்கிருதம் என்பதற்கு செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்பதே பொருளாகும். சமற்கிருதத் என்ற சொல்லின் சம் – செம்மை எனவும், க்ருத் – குறி எனவும் அறியலாம். குறி – குறிப்பு என்பது எழுத்தையும் மொழியையும் குறிப்பது. சமற்கிருதம் என்ற சொல்லே தமிழ் மூலத்தைக் கொண்டதாகும். சமற்கிருத மொழியில் காணப்படும் 1600 சொற்களை அகர வரிசைப்படுத்தி, அவை எவ்வாறு தமிழ் பேரினின்றும் மூலத்தினின்றும் திரிந்தன என்பதை இந்த அகராதி விளக்குகிறது. தமிழ் வழக்கிழந்து போன பல சொற்கள் சமற்கிருத மொழியில் உள்ளன என்பதால், சமற்கிருத மொழியில் உள்ள தமிழ்ச் சொற்களை இனம் காண்பதில் சிறிது இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லின் பேருக்கு மூலமும் அறியாத சிலர், அச்சொல்லை, சமற்கிருதத்திலும் காணப்படுவதால், அச்சொல்லை, சமற்கிருதச் சொல் என முடிவு கட்டினர். சமற்கிருதச் சொற்கள் அனைத்தையும் தமிழ்க் கண்ணோட்டத்தில் விடுவிக்க இயலும் என்பதை இந்த அகராதி விளக்குகின்றது.