All Products >> >>நோவா வரலாறு

Product Details Price: Rs 125

நோவா வரலாற்றுமாந்தனா
பக்கங்கள் 152
விலை. உரூ. 125.00
குமரிக்கண்ட அழிவோடு தொடர்புடையமக்களையும், அம்மக்கள் அப்பேரழி வினின்றும்  எவ்வாறு தப்பிப் பிழைத்துப் பலநாடுகளில் சென்றுகுடியேறினர்கள் என்ற செய்திகளையும், ஒருகதைபோன்று பல்வேறுசமயநூல்கள் விளக்குகின்றன. சுமேரிய – மெசபத்தோமிய – யூத – கிறித்துவ – இசுலாமிய – ஆரிய இலக்கியங்கள் கூட, வெள்ள அழிவினின்றுமீண்டவர் பற்றிய செய்திகளை விளக்குகின்றன. ஒவ்வொரு சமயநூலும் விளக்கும் செய்திகள் ஒன்றாக இருப்பினும், பெயர்கள் மட்டுமே வேறுபடுகின்றன. அப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மூலத்தைக் கொண்டவைகளாகவே அமைந்துள்ளன. தோராவும் விவிலியமும் குர்ஆனும் குறிப்டும் வெள்ளைக் காலமாந்தனே நோவா என்பவனாவான். வெள்ளக் காலத்துக்குமுன்பும் பின்பும் அறியப்படும் நோவா, பழையஉலகிற்கும் புதிய உலகிற்கும் தொடர்பைஏற்படுத்தும் இணைப்பும் பாலமாகக் கருதப்படுகிறான். நோவா என்பதே நாவா என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகும். நோவாகுமரிக் கண்டத்துமாந்தனா என்பதை பல்வேறுநிலைகளில், இந்நூல் அலசி ஆராய்கின்றது.