குமரிக்கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும்
பக்கங்கள் 176
விலை. உரூ. 150.00
கோள்களும் ஞாலமும் தோன்றிய காலம், மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாந்த இனம், அவ்வினத்தின் வளர்ச்சி பற்றிய செய்திகளும், தொடக்கத்தில் மாந்த இனம் தோன்றிய பகுதிகளும், பல்வேறுகாரணங்களால் அவ்வினம் பரவி வாழ்ந்த வரலாறுகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஞாலக்கோளம், இயற்கையின் உந்துதல்களுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாறிமாறி புடம் போடப்பட்டது என்ற புவியியல் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் குமரிக்கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் ஒற்றுமைப்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளன. ஞாலத்திற்கடியில் குமுறும் நெருப்புக் குழம்புகளும், அதன்மேல் மிதந்துகொண்டிருக்கும் தட்டுகளும் முட்டிமோதிக் கொண்டு, இவ்வுலகின் நிலநீர்ப் பகுதிகளை காலந்தோறும் மாற்றி வந்துள்ள சுழற்சிகளில், குமரிக்கண்டம் மறைந்துபோன செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.