தமிழும் மேற்கித்தியசெமிட்டிக் மொழியினமும்
பக்கங்கள் 408
விலை. உரூ. 250.00
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்நிறுவனம் அளித்தஉதவித்தொகையோடு, தொகுக்கப்பட்டஆ ய்வுக் கட்டுரையே இந்நூலாகும். பண்டைய மெசபத்தோமிய, பாபிலோனிய, கனானிய, சுமேரிய, எபிறேய மொழிகளுக்கும் தமிழுக்கும் இருந்த உறவுகளை இந்நூல் விளக்குகின்றது. செமிட்டிக் என்றசொல், பண்டைக் காலத்தியநடுத்தரைக் கடலுக்குக் கிழக்கேயிருந்த நாடுகளில் பேசப்பட்டமொழிக் குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல்லும் கூடத் தமிழ் மூலத்தைக் கொண்டதே. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய மொழிகளோடு, தமிழ்மொழிக்கிருந்த தொடர்புகளை ஆராயும் நூல் இதுவாகும்.