இந்தியக் கடவுளர்
பக்கங்கள் 248
விலை. உரூ. 220.00
வணக்கமுறை என்பது, சமயத்துக்கு முந்திய நிலையாகும். வணக்கமுறை, தனிப்பட்டகுழுவினரால் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படுவது. இதற்குக் கொள்கைகளோ, மெய்யியல் கூறுகளேதேவையில்லை, சமையம் என்றசொல், பல்வேறுநிலைகளில் பட்டறிந்து, மெய்யியல் கொள்கைகளுடன், ஒரு இனம் பின்பற்றும் கொள்கைக் கூறுகளைக் கொண்டதாகும். சமையம் – சமைத்தல் என்றபொருளில் அறியப்பட்டது. அதற்கெனவேதநூல்களும் இலக்கியங்களும் உண்டு. மன்னர்களோ அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களோ, அதனை ஏற்றுக் கொண்டு, அதற்குஉறுதுணையாகவும் இருப்பர். கோயில்களும் உண்டு, விழாக்களும் நடைபெறும். இவ்வாறு தங்களுக்கென ஒரு சமயத்தை உருவாக்கிக் கொண்டதமிழர்கள், ஒருகடவுள் முறையையே தொடக்கத்தில் கொண்டிருந்தனர்.