சமற்கிருதத்தின் தாய்மொழி தமிழே
பக்கங்கள் 192
விலை. உரூ. 175.00
இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூத்த அக்கையாகசமஸ்கிருதமும்
இளையதங்கையாக ஆங்கிலமும் சொல்லப்படுகின்றன. சமஸ்கிருதம் என்ற மொழியை பிரம்மாவே தோற்றுவித்ததாகஆரியர்கள் கூறுகின்றனர். சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பம், செமிட்டிக் மொழியுடன் தொடர்புடையதென்பது மேலைநாட்டு ஆய்வாளர்களின் கருத்து. தேவநேயப் பாவாணர், சமஸ்கிருதத்தின் 40 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் உள்ளவென்றுகூறினார். ஆனால் ஆய்வுமுடிவுகள், சமஸ்கிருதமொழிச் சொற்கள் அனைத்துமே, தமிழின் வேரினையும் மூலத்தையும் கொண்டுள்ளன என்பதை மெய்ப்பிக்கின்றன. சமஸ்கிருதம் தனிமொழியுமன்று, மூல மொழியுமன்று, அதுதமிழின் கிளைமொழியே என்பதை பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து இந்நூல் விளக்குகின்றது.