சேயோன்
பக்கங்கள் 248
விலை. உரூ. 150.00
குறிஞ்சிக் கடவுளான சேயோன், தமிழ்ச் சமயத்தின் முழுமுதற் கடவுளாவான். சேய்மை யென்பது தொலைவு என்ற பொருளில், மலைக்கடவுள், சேயோன் எனப்பட்டான். பிற்கால இலக்கியங்கள் அவனைச் சிவனாகச் சுட்டுகின்றன. ஆரியச் சமயம், சிவனை உருத்திரனாக்கிக் கொண்டது. சிவனுக்கும் உருத்திரனுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லையானாலும், ஆரியர்கள் வலிந்து சிவனை உருத்திரனாகக் காட்டி, அவனை இரிக்கு வேதக் கடவுளாகக் கூட காட்ட முயன்றுள்ளனர். தமிழில் அறியப்பட்ட சிவனைப் பற்றிய தொன்மங்கள், சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலநூல் களாகவே விளக்கப்பட்டுள்ளன. சிவன் தமிழ்க்கடவுளே என்பதை, சேயோன் என்ற நூல் விளக்குகின்றது.