சொல் – I
பக்கங்கள் 128
விலை. உரூ. 120.00
ஒரு மொழியிலுள்ள சொற்களின் வேரும் மூலமும், அம்மொழியிலே அறியப்பட்டால், அதுவே முதன்மொழியும், தனிமொழியுமாகக் கருதப்படும். இத்தகைய தகுதிகள் உலகில் எம்மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பல மொழிகளின் அறிஞர்கள், அந்தந்த மொழிகளில் உள்ள சொற்களுக்கான வேர்ச் சொற்களையும் காட்டுகின்றனர். சமற்கிருத மொழியிலுல்ல வேர்ச்சொல்லை. தாது என்பர். சமற்கிருதச் சொற்களில் பல வேர்கள் காட்டப்பெறாதவை. காட்டப்பெறும் வேர்களும், தமிழ் வேராகவே உள்ளதை அறியலாம். மொழியென்பது இயற்கையில் கேட்கப்படும் ஒலிகளின் தாக்கங்களால் உருவாகக் கூடியதே. பிறமொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டு உருவான மொழிகள், தனி மொழியென்ற தகுதியைப் பெறுவதில்லை சொல்லில் உள்ள நுணுக்கங்கள், சிறப்புகள் பற்றிய விளக்கங்களை சொல் என்ற தலைப்பில் உள்ள 4 நூல்களும் தருகின்றன.