தொல் தமிழர் வரலாறு – 6
பக்கங்கள் 144
விலை. உரூ. 120.00
தமிழருடைய வரலாற்றை இதுவரையில் முழுமையாக எவரும் தொகுக்கவில்லை. தமிழ் நாட்டு அரசோ, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களோ அதற்கான முயற்சிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தமிழர் வரலாற்றை எழுத ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு அவ்வுணர்வு ஏற்படாதிருந்ததில் வருத்தப்பட எதுவுமில்லை. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய வரலாற்றைக் கூட முழுமையாக எழுத எவரும் முன்வரவில்லை. ஆரிய பிராமணர்கள் இந்திய அரசின் ஆற்றல் மிகுந்த துறைகளில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுக்குத் தம் இனத்தை முன்னிறுத்தியே வரலாற்றை எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வுகள் உள்ளன. ஆரியரின் இந்திய வருகைக்கு முன்போ, தமிழரின் நகரிய நாகரிக வரலாற்றை வெளிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. சிந்துவெளி நாகரிகத்தைக் கூட, ஆரிய நாகரிகம் என்றே திசை திருப்பி வருகின்றனர். வின்சென்ட் ஸ்மித் தெற்கிலிருந்தே இந்திய வரலாறு தொடங்கப்படல் வேண்டும் என்றார்.