தமிழும் விவிலியமும் – 1
பக்கங்கள் 230 – விலை. உரூ. 200.00
எபிறேய மொழி, கி.மு. 2000 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்த மொழியாகும். இம்மொழியில் தான் தோரா என்ற யூத சமயநூல் எழுதப்பட்டது. அபிறகாம் முதல் இயேசு பிறப்பு வரையிலான அந்நூல், கிறித்துவத்தால் ஏற்கப்பட்டு, பழைய ஏற்பாடு என்றவாறு தமிழில் சொல்லப்படுகிறது. முற்றிலும் எபிறேய மொழியில் எழுதப்பட்ட அந்நூல், அக்காலத்திய நூல்களில் முபமையானதாகவும் உள்ளது. எபிறேய மொழி, தமிழின் கிளை மொழியே என்று தற்கால ஆய்வுகள் உணர்த்துவதை அடிப்படையாகக் கொண்டு, விவிலியத்தின் பழை ஏற்பாட்டு நூலில் காணப்படும் பல சொற்களுக்கான தமிழ் மூலம் விளக்கப்பட்டுள்ளது.