மதுரை அகழ்வாய்வு நகரம் கீழடி
பழம் பெரும் நகரம் மதுரை
உலகின் முதல் நாகரிக நகரமாக மதுரை அறியப்படுகிறது.வெள்ளக் காலத்துக்கு முன்பே,தென் மதுரை பற்றிய செய்திகள் ,தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன . மதுரை என்பதற்கு,மது குடித்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் அங்கு வாழ்ந்த மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து இருந்தனர் என்ற பொருந்தாத காரணத்தைக் கூறுகின்றனர் .உண்மையில் ,இன்றும் அப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவரும் மருதை என்பதே, அந்நகரின் முதல் பெயர் ஆகும். மருத நிலம் சூழ்ந்துள்ள பகுதியாதலால், மருதை எனப்பட்டது . அண்மையில், மதுரைக்கு அருகே நடைப்பெற்று வரும் அகழ்வாய்வுகள் பற்றிய செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, கடந்த 1915, ஜூன் இரண்டாவது வாரத்தில் அவ்விடத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது .ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ,அவ்விடத்தின் பொறுப்பான அலுவலர், என்னை அழைத்துச் சென்று , அகழ்வாய்வுகளின்
வெளிப்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார் .மதுரைக் காரரான அந்த அலுவலர்,சங்க இலக்கியங்களில் புலமை பெற்றுள்ளவர் என்றாலும்,அவர் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்.அகழ்வாழ்வின் தொடக்கக் காலம் என்பதால் ,புதையுண்டியிருக்கும் நகரம் பற்றி ,இப்போது முடிவாக எவற்றையும் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.
உண்மையில் மைய அரசின் தொல்லியல் துறை இருக்கும் நிதியை செலவிட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவ்விடத்தைத் தேர்வு செய்தனர் .வையை ஆற்றின் இரு கரைகளிலும் ஏறக்குறைய மதுரையிலிருந்து 50 கி .மு .வரை, இரு புறங்களிலும், இது போன்ற நகரங்கள் புதையுண்டு கிடப்பது ,முதல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது . இருக்கின்ற நிதியைச் செலவிட வேண்டும் என்ற அளவில் வேண்டா வெறுப்பாகவே அவ்விடம் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.அதன் வெளிப்பாடுகள் தொல்லியல் துறையினரே எதிர்பார்க்காதவை .முற்றிலும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமாக அவ்விடம் காட்சியளிக்கிறது .
அங்கு கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய கால அளவை , மிகவும் குறைத்தே அனைவரும் மதிப்பிடுகின்றனர் .கி .மு .500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் வரலாறு சென்று விடக் கூடாது என்பதில், மத்திய மாநில தொல்லியல் துறையின் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். ரேடியோ கார்பன் முறையிலான மதிப்பீட்டுக்கு இது வரை அங்கு கிடைத்த பொருட்கள் உட்படுத்தப்படவில்லை .அவ்வாறு உட்படுத்தப்பட்டாலும், அக்காலத்தின் காலம், கி .மு .500 ஆண்டுகளை யொட்டியே அறிவிப்பார்கள் என்பது உறுதி. தாமிரவருணி வையை ஆற்று நாகரிகங்கள், கி .மு .10000 ஆண்டு காலத்தை யொட்டியவை. ஆதிக்க நல்லூர் பழனி மதுரைப் பகுதிகளில் அதற்கான சான்றுகள் உள்ளன .அப்பகுதிகளில் எல்லாம் கன ஆய்வுகள் மேற்கொண்டதின் அடிப்படையிலும் ,தமிழக நாகரீகத்தின் சுவடுகள், கி .மு .10000 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கும் பரவியுள்ளதையும் கொண்டும் இதனை மெய்ப்பித்து வருகிறேன். எனவே மதுரை அகழ்வாய்வு நகரம், தமிழரின் பழம்பெறும் தொடர்ச்சியே எனலாம்.
மதுரைக்குச் சென்று திரும்பியவுடன் ,சென்னையில் தொல்லியல் துறையைச் சார்ந்த மூத்த அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன் .அவர் தமிழர். மதுரை அகழ்வாய்வு பற்றி கேட்ட போது, அந்நகரத்தின் காலம் பற்றிய செய்திகள் எவற்றையும், தொல்லியல் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று தலைமையிலிருந்து உத்தரவு வந்திருப்பதாகக் கூறினார். மேலும் தமிழரிடமே அந்த அகழ்வு பொறுப்பை ஒப்படைக்கவும் இல்லை யென்பதையும் வருத்தத்துடன் கூறினார். தொல்லியல் துறையின் வழக்கமான அலுவலகத் தொடங்கப்பட்ட அகழ்வாய்வு, அதிகாரிகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .
வெளிப்பாடுகள் வியப்புக்குரியனவாக இருப்பதால் நிதியை மேற்கோளாகக் காட்டி அகழ்வாய்வும் இடையில் நிறுத்தப்படலாம் என்று, தொல்லியல் துறையினரே ஐயப்பாட்டுடன் கூறி வருகின்றனர். அங்கு கிடைத்த பொருட்களை, கர்நாடகத்துக்குச் எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருப்பதும், அரசியல் உள் நோக்கம் கொண்டது. தமிழின் வரலாற்றை மூடி மறைக்க மேற் கொள்ளப்படும் முயற்சியே.
வசதி படைத்த தமிழார்வம் கொண்ட தமிழர்கள், அகழ்வாய்வு பொருட்களில் சிலவற்றை, இலண்டனில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முன் வர வேண்டும். கிளன் மில்னே (Glen Milne ) என்ற ஆங்கிலேய ஆய்வாளர், தொல்லியல் பொருட்களின் காலத்தை அறிந்து கொல்லும் அறிஞராகக் கருதப்படுகிறார். அவரிடம் கால மதிப்பீட்டை அறிய முயல வேண்டும் பூம் புகாருக்குக் கிழக்கே கண்டுபிடிக்கப்பட்ட பழைய நகரத்தின் காலம், கி .மு .11500 என அறிவித்தவர் அவரே.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் ஒருவர், மதுரை அகழ்வாய்வு பற்றி முந்திரிக்கொட்டைப் போல் முந்திக் கொண்டு கருத்துக்களைக் கூறியுள்ளார் . ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள், உண்மையுக்குப் புறம்பானவை. மதுரை ஆய்வுகளின் முடிவுகள் பற்றி அவர் கூறிய கருத்துகளும் .ஏற்புடையவை அன்று . கி .மு .1000-500 என்ற ஆண்டுக் கணக்கை அவர் முன் வைக்கிறார். தமிழ் நாட்டு தொல்லியல் துறையைச் சார்ந்த இயக்குநர்கள் (குறிப்பாக இருவர் ) தமிழர் வரலாற்றை மூடி மறைக்கும் முடிவுகளையே இதுவரை வெளியிட்டுள்ளனர் .
மதுரை அகழ்வாய்வுகள், தமிழரின் வரலாற்றைத் தெளிவு படுத்தும், தூக்கி நிறுத்தும். என்ன முடிவுகள் அறிவிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .
ம .சோ .விக்டர்
7.10.2016. சொல், மொழி, வரலாற்று ஆய்வாளர்